என் மலர்

  செய்திகள்

  சிவசங்கரன்
  X
  சிவசங்கரன்

  தங்க கடத்தல் வழக்கு- ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ. 3வது முறையாக விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3-வது முறையாக விசாரணை நடத்தினர்.
  திருவனந்தபுரம்:

  கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்ட வழக்கில் முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

  இந்த சம்பவத்தில் கேரள அரசின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவசங்கருக்கும், தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

  இந்த தங்க கடத்தல் விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே சிவசங்கரிடம் 2 முறை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி இருந்தது.

  இந்நிலையில் இந்த சம்பவத்தில் இ.பி.கோ. பிரிவின் 160-ன் கீழ் மேலும் ஒரு வழக்கை என். ஐ.ஏ. பதிவு செய்து உள்ளது. இது தொடர்பாக நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் விசாரணைக்கு ஆஜராக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

  இதன்படி நேற்று காலை கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் சிவசங்கர் அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் நேற்று 3-வது முறையாக காலை 11.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை டி.எஸ்.பி. ராதா கிருஷ்ணபிள்ளை தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

  இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறிய போது, இந்த சம்பவத்தில் அமைச்சர் ஜலீலிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து சிவசங்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தேவைப்பட்டால் மீண்டும் ஆஜராக வலியுறுத்தப்பட்டது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×