search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தியர்களை அழைத்து வர சவுதி அரேபியா அனுமதி

    வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    புதுடெல்லி:

    கொரோனா ஆதிக்கம் செலுத்தும் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் கொரோனா பரவலை காரணம் காட்டி தங்கள் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் விமானங்களை இயக்கவும், இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு விமானங்கள் வருவதற்கும் கடந்த செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியா தடை விதித்தது. ஆனால், வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவில் இருந்து தொடர்ந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பயணிகள் விமானம் இயக்கப்படாது. வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் அங்கிருந்து இந்திய பயணிகள் தொடர்ந்து அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×