search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள விவசாய மந்திரி சுனில் குமார்
    X
    கேரள விவசாய மந்திரி சுனில் குமார்

    வேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்- கேரள விவசாய மந்திரி பேட்டி

    சட்டநிபுணர்களிடம் கருத்து கேட்டு வேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று கேரள விவசாய மந்திரி சுனில் குமார் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் மசோதாக்கள் நேற்று எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்களிடையே பாராளுமன்றத்திலும், மேல் சபையிலும் நிறைவேறியது.

    இந்த மசோதாக்களுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் வேளாண் மசோதாவை கடுமையாக எதிர்த்தது.

    இந்த நிலையில் வேளாண் மசோதாக்கள் பாராளுமன்ற இரு சபைகளிலும் நிறைவேறியதை தொடர்ந்து கேரள மாநில விவசாய மந்திரி சுனில் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களை எதிர்க்கிறோம். இந்த சட்ட மசோதாக்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்க தொடருவது குறித்து சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு வருகிறோம்.

    வருகிற 30-ந் தேதிக்குள் இதுதொடர்பான அறிக்கை அளிக்கும்படியும் அவர்களிடம் கூறியுள்ளோம்.

    சட்ட நிபுணர்கள் அளிக்கும் கருத்தின் அடிப்படையில் வேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவது குறித்து முடிவு செய்வோம்.

    இந்த மசோதா மூலம் கார்ப்ரேட்டுகள் மட்டுமே பலன் அடைவார்கள். ஏழை விவசாயிகள் யாருக்கும் இதனால் எந்த பலனும் கிடைக்காது. எனவே தான் இந்த மசோதாவை எதிர்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×