search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரணாப் முகர்ஜி
    X
    பிரணாப் முகர்ஜி

    பிரணாப் முகர்ஜியின் நிறைவேறாத ஆசை

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒரு முக்கியமான ஆசை, நிறைவேறாமல் போய் விட்டது.
    கொல்கத்தா:

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒரு முக்கியமான ஆசை, நிறைவேறாமல் போய் விட்டது.

    அது, அவரது சுய சரிதையை ஆங்கிலத்தில் எழுதி வெளியிடும் ஆசை ஆகும். அந்த சுய சரிதையை அவரது பால்ய கால நண்பரும், பேராசிரியருமான அமல் குமார் முகோபாத்யாய் எழுத வேண்டும் என்று விரும்பி இருக்கிறார்.

    இதுபற்றி பேராசிரியர் அமல்குமார் முகோபாத்யாய் கூறும்போது, ‘‘உடல்நலமற்று போவதற்கு சில தினங்களுக்கு முன்பாகத்தான் பிரணாப் என்னோடு தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் கொரோனா வைரஸ் தொற்று காலம் முடிந்ததும் கொல்கத்தா வருகிறேன், முழுமையாக 3 நாட்கள் உனக்கு ஒதுக்கி தருகிறேன். சுய சரிதைக்காக என்னை பேட்டி எடுத்துக்கொள் என்று கூறி இருந்தார். ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது’’ என உருக்கமுடன் தெரிவித்தார்.
    Next Story
    ×