search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராவி சிவ்ராஜ் மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் செயற்கை குளத்தை படத்தில் காணலாம்.
    X
    தாராவி சிவ்ராஜ் மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் செயற்கை குளத்தை படத்தில் காணலாம்.

    மும்பையில் விநாயகர் சிலைகளை கரைக்க 167 செயற்கை குளங்கள்

    மும்பையில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது பொதுமக்கள் கடற்கரைகளில் கூடுவதை தவிர்க்க மாநகராட்சி 167 செயற்கை குளங்களை அமைத்து உள்ளது.
    மும்பை ;

    கொரோனா பிரச்சினை காரணமாக விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட மாநில அரசு பொதுமக்கள், மண்டல்களை அறிவுறுத்தி உள்ளது. இந்தநிலையில் சிலைகளை கரைக்கும்போது பொதுமக்கள் கடற்கரைகளில் கூடுவதை தவிர்க்க பல்வேறு இடங்களில் மாநகராட்சி செயற்கை குளங்களை அமைத்து உள்ளது. அதன்படி மும்பையில் 167 செயற்கை குளங்களை அமைத்து இருப்பதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினர்.

    மாநகராட்சி செயற்கை குளம் அமைத்ததற்கு தாராவியை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து சச்சின் என்பவர் கூறுகையில், வழக்கமாக நாங்கள் சிலைகளை கரைக்க தாதர் அல்லது மாகிம் கடற்கரைக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் இந்த ஆண்டு வீட்டருகிலேயே சிலைகளை கரைக்க முடியும், என்றார்.

    தாராவியில் சாகுநகர், முனிசிபல் பள்ளி அருகில் உள்ள சிவ்ராஜ் மைதானம் மற்றும் நாயக் நகர் பகுதியில் உள்ள பம்பிங் கிரவுண்ட் ஆகிய 3 இடங்களில் செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மாநகராட்சி 31 இடங்களில் மட்டுமே செயற்கை குளங்கள் அமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×