search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் பைலட்
    X
    சச்சின் பைலட்

    வலுவான போர் வீரன்தான் எல்லைக்கு அனுப்பப்படுவான்: சச்சின் பைலட்

    ராஜஸ்தான் சட்டசபையில் சச்சின் பைலட் இருக்கை மாற்றப்பட்டது குறித்து பேசுகையில், வலுவான போர் வீரன்தான் எல்லைக்கு அனுப்பப்படுவான் என்று தெரிவித்துள்ளார்.
    ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    ராகுல் காந்தி சமரசம் செய்ய சுமார் ஒரு மாதத்திற்குப்பிறகு சச்சின் பைலட் அசோக் கெலாட் உடன் சேர்ந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்தார்.

    இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியது, சச்சின் பைலட் அவைக்கு வந்தார். அப்போது முதல்வர் அருகில் போடப்பட்டிருந்த அவரது இருக்கை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.-க்கள் அமர்ந்து இருக்கும் மேஜை அருகில் மாற்றப்பட்டிருந்தது.

    இதுகுறித்து சச்சின் பைலட் கூறுகையில் ‘‘நான் சட்டசபைக்குள் வந்தபோது, என்னுடைய இருக்கை மாற்றப்பட்டதை கண்டேன். ஏன் என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தற்போது அந்த சீட்டில் இருக்கும்போது அது பாதுகாப்பானது என்று உணர்ந்தேன். தற்போது நான் எதிர்க்கட்சிகளுக்கு அடுத்து உள்ளேன். பின்னர், இந்த சம்பவத்தை நான் எல்லைக்கு அனுப்பட்டுள்ளேன். ஏனென்றால், தைரியமான மற்றும் வலுவான போர்வீரன்தான் எல்லைக்கு அனுப்பப்படுவான் என்பதை போன்று உணர்ந்தேன். எங்கள் கவசம் மற்றும் ஆயுதங்களுடன் தாக்குதலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.’’ என்றார்.
    Next Story
    ×