search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ  விபத்து
    X
    தீ விபத்து

    ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொகுசு ஓட்டல் ஒன்று கொரோனா வார்டாக மாற்றப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.  5 மாடி கொண்ட அந்த சொகுசு ஓட்டலில் தற்போது பயங்கர தீ  விபத்து ஏற்பட்டுள்ளது.  ஓட்டலில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மேலும் சொகுசு ஓட்டலில் 3வது மாடியில் கொரோனா தொற்று சிகிச்சையிலிருந்த 10 நோயாளிகள் மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த தீ  விபத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என அச்சத்தில் அவர்களை மீட்கும் பணியில் காவல்துறை, மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சொகுசு ஓட்டலில் ஒரு பகுதியில் பற்றிய தீ, மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான புகை மூட்டம் சூழ்ந்தது. மேலும் தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள்அ ங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×