search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியா சக்ரபோர்த்தி
    X
    ரியா சக்ரபோர்த்தி

    அமலாக்கத்துறை முன் ஆஜரானார் ரியா சக்ரபோர்த்தி

    சுஷாந்த் சிங் ராஜ்புத் பணத்தை பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் ரியா சக்ரபோர்த்தி அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு தூண்டப்பட்டார். சுஷாந்த் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் அவருக்கு தொடர்பே இல்லாத ஆட்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், சுஷாந்த்தின் லேப்டாப், பணம், கிரெடிட் கார்டுகள், பின் நம்பர் ஆகியவற்றை ரியா குடும்பத்தினர் திருடிவிட்டடார் என அவரது தந்தை புகார் அளித்திருந்தார்.

    இதனால் பணமோசடி வழக்கில் ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட ஆறுக்கும் மேற்பட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    இதனைத்தொடர்ந்து இன்று ஆஜராகி பணமோசடி தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரியா சக்ரபோர்த்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், சுப்ரீம்கோர்ட்டில் உள்ள மனு மீதான விசாரணை வரைக்கும் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ரியாவின் கோரிக்கையை அமலாக்கத்துறை நிராகரித்தது.

    இதனால் இன்று மும்பை பல்லார்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலத்திற்குச் சென்று அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அப்போது அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன.

    அவருடன் சகோதரர் சௌவிக், ஸ்ருதி மோடி ஆகியோரும் ஆஜராகினர். விசாரணையின்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் உடனான நட்பு, வணிக ஒப்பந்தங்கள், வருமானம், முதலீடு, தொழில்முறை ஒப்பந்தங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×