என் மலர்
நீங்கள் தேடியது "rhea chakraborty"
- அடைத்து வைத்ததற்கோ, அச்சுறுத்தியதற்கோ அல்லது தற்கொலைக்குத் தூண்டியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை
- சுஷாந்த் பரிசளித்த தனது ஆப்பிள் மடிக்கணினி மற்றும் கைக்கடிகாரத்தை மட்டுமே ரியா எடுத்துச் சென்றார்.
2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்மை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனையில், இது தற்கொலை என கூறப்பட்டாலும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஷாந்தின் தந்தை தெரிவித்திருந்தார்.
சுசாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி தான் காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குற்றம்சாட்டி வந்தனர். ரியாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுஷாந்தின் தந்தை 2021 இல் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் சிபிஐ தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில் ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சிபிஐ நீக்கியுள்ளது.
அதாவது, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலைதான் என்றும், இதில் ரியா சக்ரவர்த்திக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் சிபிஐ தனது அறிக்கையில் கூறி, வழக்கை முடித்து வைத்துள்ளது.
அறிக்கைப்படி, ரியா சக்ரவர்த்தியோ அல்லது வேறு யாரும் சுஷாந்தை சட்டவிரோதமாக அடைத்து வைத்ததற்கோ, அச்சுறுத்தியதற்கோ அல்லது தற்கொலைக்குத் தூண்டியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ரியா சக்ரவர்த்தியும் அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தியும் சுஷாந்தின் பாந்த்ரா குடியிருப்பில் இருந்து அவர் இறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக, அதாவது ஜூன் 8, 2020 அன்று வெளியேறிவிட்டனர். அதன்பிறகு அவர்கள் சுஷாந்தை சந்திக்கவில்லை.
மேலும் சுஷாந்தின் பொருட்களை ரியா எடுத்துக்கொண்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது. சுஷாந்த் பரிசளித்த தனது ஆப்பிள் மடிக்கணினி மற்றும் கைக்கடிகாரத்தை மட்டுமே ரியா எடுத்துச் சென்றார்.
சுஷாந்த், ரியா சக்ரவர்த்தியை குடும்பத்தின் ஒரு பகுதி என்று விவரித்துள்ளார், எனவே ரியாவின் செலவுகள் சுஷாந்தின் அறிவுறுத்தலின் பேரில் நடந்தது என்பதால் இதில் எந்தவிதமான நிதி மோசடியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியா சக்ரவர்த்தி, சுஷாந்தின் மருத்துவ ஆவணங்களை வெளியிடுவதாக அச்சுறுத்தினார் என்பது வாய்வழி செய்தி மட்டுமே என்பதால் அது தற்கொலைக்கு நேரடித் தூண்டுதலோ அல்லது சட்டவிரோதக் கட்டுப்பாடோ இல்லை என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சிபிஐ-யின் இந்த அறிக்கையை, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே. சிங் கண் துடைப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார்.
- இவரது வழக்கை பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிரபல இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

சுஷாந்த் சிங் ராஜ்புட் -ரியா சக்ரவர்த்தி
இதையடுத்து மும்பை போலீசார் நடத்திவந்த இந்த விசாரணை மத்திய விசாரணை அமைப்பான சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அமலாக்கத்துறை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவையும் நடிகரின் மரண வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றன.
சமீபத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

ரியா சக்ரவர்த்தி பதிவு
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில், அவரது முன்னாள் காதலி ரியா சக்ரவர்த்தி சமூக வலைதளத்தில் சுஷாந்த் சிங்குடன் இருக்கும் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்து அவரை நினைவுக்கூர்ந்துள்ளார். ஒரு பாறையின் மேல் இவர்கள் இருவரும் இருக்கும் இந்த வீடியோவில் 'நீ இங்கு இருந்திருந்தால்' என்று பதிவிட்டுள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்து மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


We are extremely happy to be Introducing Rhea Chakraborty @Tweet2Rhea in #DhanusuRaasiNeyargalae 🏹@isanjaybharathi@iamharishkalyan@GhibranOfficial@gokulam_movies@SureshChandraa@DoneChannel1pic.twitter.com/3xT23DvZjP
— Sree Gokulam Movies (@Gokulam_Movies) April 21, 2019






