நீ மட்டும் இருந்திருந்தால்... வீடியோ பதிவிட்டு உருகிய சுஷாந்த் சிங் காதலி

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார்.இவரது வழக்கை பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நீ மட்டும் இருந்திருந்தால்... வீடியோ பதிவிட்டு உருகிய சுஷாந்த் சிங் காதலி
Published on

பிரபல இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

சுஷாந்த் சிங் ராஜ்புட் -ரியா சக்ரவர்த்தி

இதையடுத்து மும்பை போலீசார் நடத்திவந்த இந்த விசாரணை மத்திய விசாரணை அமைப்பான சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அமலாக்கத்துறை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவையும் நடிகரின் மரண வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றன.

சமீபத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

ரியா சக்ரவர்த்தி  பதிவு

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில், அவரது முன்னாள் காதலி ரியா சக்ரவர்த்தி சமூக வலைதளத்தில் சுஷாந்த் சிங்குடன் இருக்கும் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்து அவரை நினைவுக்கூர்ந்துள்ளார். ஒரு பாறையின் மேல் இவர்கள் இருவரும் இருக்கும் இந்த வீடியோவில் 'நீ இங்கு இருந்திருந்தால்' என்று பதிவிட்டுள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்து மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com