போலீசார் என் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியாவுக்கு சொந்தமானது - ரகுல்பிரீத்சிங் பரபரப்பு வாக்குமூலம்

போலீசார் தன் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியா சக்ரவர்த்திக்கு சொந்தமானது என நடிகை ரகுல்பிரீத்சிங் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ரகுல் பிரீத் சிங், ரியா சக்ரவர்த்தி
ரகுல் பிரீத் சிங், ரியா சக்ரவர்த்தி
Published on

இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருயை தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி உள்ளிட்டவர்கள் மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் ரியாவின் உரையாடல் மூலம் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடிகை ரியா, அவருடைய சகோதரர் ஷோவிக்சக்ரவர்த்தி உள்பட 15 பேரை கைது செய்தனர்.

இது தவிர போதை கும்பலுடன் செல்போன் மூலம் தொடர்பில் இருந்த நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா, அலிகான், சிரத்தாகபூர் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியது. முன்னதாக ரகுல்பிரீத்சிங் வீட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ரகுல்பிரீத்சிங் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அதிகாரிகள் கூறியதாவது: விசாரணையின் போது, நடிகை ரியாவுக்கும், ரகுல் பிரீத்சிங்குக்கும் இடையே போதைப் பொருள் பரிமாற்றம் பற்றி நடந்த உரையாடல் பதிவை காண்பித்து விசாரித்தோம். அப்போது இருவரும் உரையாடியதை அவர் ஒப்புக் கொண்டார்

மேலும் தனது வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் நடிகை ரியா சக்ரவர்த்திக்கு சொந்தமானது. அவர் அதை தனது வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ள இருந்தார் என்பதையும் ரகுல் பிரீத்சிங் ஒப்புக்கொண்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com