search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூகுள் பே மூலம் பணம் மோசடி
    X
    கூகுள் பே மூலம் பணம் மோசடி

    பெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்

    பெங்களூருவில், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுபவர் தனது நண்பருக்கு கூகுள் பே மூலமாக ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெங்களூரு :

    பெங்களூரு அரகெரே அருகே வசித்து வருபவர் நாகபூஷண். இவர், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்று வருகிறார். நாகபூஷண் தனது நண்பருக்கு கூகுள் பே மூலமாக ரூ.300 அனுப்பினார். ஆனால் அவரது நண்பருக்கு பணம் செல்லவில்லை. உடனே நாகபூஷண், கூகுள் பே வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை இணையதளத்தில் தேடி பார்த்து, அதில் வந்த கூகுள்பே வாடிக்கையாளர் மைய சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி, நண்பருக்கு அனுப்பிய ரூ.300 கிடைக்கவில்லை என்று கூறினார்.

    அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர், நீங்கள் அனுப்பிய பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், உங்களது வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனுப்பும்படி கூறி தெரிவித்துள்ளார். இதையடுத்து, மர்மநபர் கூறிய செல்போன் முகவரிக்கு தனது வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் நாகபூஷண் அனுப்பி வைத்திருந்தார். அவ்வாறு அனுப்பிய சில நிமிடங்களில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டு இருப்பதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.

    இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். சைபர் கிரைமில் ஈடுபடும் நபர்கள் போலி வாடிக்கையாளர் சேவை மைய எண்களை இணையதளத்தில் வெளியிட்டு நாகபூஷணிடம் ரூ.1 லட்சத்தை அபரிகத்தது தெரியவந்தது. இதுகுறித்து தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நாகபூஷண் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    Next Story
    ×