search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதித்யா தாக்கரே
    X
    ஆதித்யா தாக்கரே

    சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் என் மீது தனிப்பட்ட தாக்குதல்: ஆதித்யா தாக்கரே வேதனை

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் விவகாரத்தில் என் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தப்படுகிறது என்று ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
    நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆனால், எந்தவொரு தற்கொலை கடிதமும் அவரது இல்லத்தில் சிக்கவில்லை.

    மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

    கடந்த வாரம் ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை பீகார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் இருந்து இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநில இடையே வழக்கை விசாரிப்பது குறித்து மோதல் ஏற்பட்டுள்ளது.

    இன்று பீகார் அரசு சார்பில் சிபிஐ விசாரணை கோரப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆத்தியா தாக்கரே மாநில மந்திரியாக உள்ளார்.இந்த விவகாரத்தில் அவர் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு வேதனை தெரிவித்துள்ளார் ஆதித்யா தாக்கரே.

    இதுகுறித்து ஆதித்யாக தாக்கரே கூறுகையில் ‘‘நான் பால்தாக்கரேயின் பேரன். மகாராஷ்டிரா, சிவ சேனா, தாக்கரே குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயலையும் ஒருபோதும் செய்ய மாட்டேன் என்பதை கூற விரும்புகிறேன்.

    என் மீது பழிபோடுவது மிகவும் மலிவான மோசமான அரசியல். இருந்தாலும் நான் அமைதியாக இருந்து வருகிறேன். மகாராஷ்டிரா அரசு கொரோனா வைரசுக்கு எதிராக போரிட்டு வருகிறது. நாங்கள் பெற்ற வெற்றிகளை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சுஷாந்த் வழக்கை அவர்கள் அரசியல்மயமாக்க தொடங்கிவிட்டனர்.

    சினிமா உலகம் மும்பையுடன் சேர்ந்த ஒரு பகுதி. ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்திற்காக இந்த தொழிலை சார்ந்து உள்ளனர். தொழில்துறையைச் சேர்ந்த சிலருடன் எனக்கு தனிப்பட்ட உறவுகள் உள்ளன. இது குற்றம் அல்ல’’ என்றார்.
    Next Story
    ×