என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.87422 கோடி
Byமாலை மலர்1 Aug 2020 12:01 PM GMT (Updated: 1 Aug 2020 12:41 PM GMT)
இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வசூல் 87 ஆயிரத்து 422 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் கூறி உள்ளது.
புதுடெல்லி:
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரே பொருட்களுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படும் நிலை மாறி, ஒரே வரியாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது அரசுக்கு மாத வருவாய் சராசரியாக ரூ.98 ஆயிரத்து 114 கோடியாக இருந்தது. பின்னர், கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், வரி வருவாயும் மெல்ல மெல்ல அதிகரித்தபடி இருந்தது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொழில்துறை முடங்கியதால் மார்ச் மாதத்தில் இருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் குறையத் தொடங்கியது.
தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி உள்ள நிலையில், வரி வருவாயும் சற்று உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி வருவாய் குறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஜூலை மாதத்தில் 87,422 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.16,147 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.21,418 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.42,592 கோடி, கூடுதல் ‘செஸ்’ வரி ரூ.7,265 கோடி அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×