என் மலர்
செய்திகள்

ஸ்மார்ட்போன்
ஆன்-லைன் கற்றல்: 11, 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவிகளுக்கு 50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள்: பஞ்சாப் அரசு
கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்-லைன் மூலம் பாடங்களை கற்றுக்கொள்ள பஞ்சாப் அரசு மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்க இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளை திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் ஆன்-லைன் மூலம் பாடங்களை நடத்த மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன. அப்படி நடத்தும்போது ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுவார்கள்.
இதனால் 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவிகளுக்கு 50 ஆயிரம் ஸ்மார்ட்போகன்கள் வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளன. கொரோனா காலத்தில் மாணவிகள் ஆன்-லைன் மூலம் கல்வி கற்க முன்னுரிமை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story