search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்வப்னா சுரேஷ்
    X
    ஸ்வப்னா சுரேஷ்

    கேரள தங்க கடத்தல் வழக்கு- ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 5 நாள் சுங்கத்துறை காவல்

    கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சுங்கத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    கொச்சி:

    கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள, முன்னாள் தூதரக அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயரின் மனைவி சௌமியா, ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஸ்வப்னா உள்பட 11 பேர் மீது கொச்சி அமலாக்கப் பிரிவும் வழக்கு பதிவு செய்துள்ளது.

    இதுஒருபுறமிருக்க, தங்கக் கடத்தல் தொடர்பாக சுங்கத்துறையும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. கடத்தலில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்னர். குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 5 நாட்கள் சுங்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க கொச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வரின் முன்னாள்  செயலாளருமான சிவசங்கரிடம் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றும் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×