என் மலர்

  செய்திகள்

  மழையால் உடைந்த பாலம்
  X
  மழையால் உடைந்த பாலம்

  உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழை- கோசி ஆற்று பாலம் உடைந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கோசி ஆற்று பாலம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  பிதோராகர்:

  உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஆங்காங்கே வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், பிதோராகர் மற்றும் பங்கபானி தாலுகாக்களின் கீழ், கோசி நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
  Next Story
  ×