search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் பைலட்
    X
    சச்சின் பைலட்

    சபாநாயகர் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு: நாளை விசாரணை

    கட்சிக்கு எதிராக செயல்பட்டாதக் கூறி சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
    ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் வெடித்தது. சச்சின் பைலட் தனது ஆதர்வாளர்களுடன் அசோக் கெலாட் கூட்டிய காங்கிரஸ் சட்டசபை எம்ல்ஏ-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    இதனால் சச்சின் பைலட் மற்றும் இரண்டு மாநில மந்திரிகளை அசோக் கெலாட் அதிரடியாக நீக்கினார். மேலும் கட்சியில் இருந்தும் பைலட் நீக்கப்பட்டார். இதனால் பா.ஜனதாவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜனதாவில் இணையமாட்டேன் என்ற திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

    இதற்கிடையில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார். நாளைக்குள் விளக்கம் அளிக்காவிடில் தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    இதனால் தகுதி நீக்க செய்ய வாய்ப்புள்ளதாக கருதி, சபாநாயகர் நோட்டீஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. நாளை மதிய ஒரு மணிக்கு மனு மீதான விசாரணை நடக்கிறது.
    Next Story
    ×