search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை சகோதரிகள்
    X
    இரட்டை சகோதரிகள்

    ஒரே மாதிரியான சதவீதம், மதிப்பெண்கள் பெற்ற நொய்டா இரட்டை சகோதரிகள்

    சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் நொய்டாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மாதிரியான சதவீதம், ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சர்யப்பட வைத்துள்ளனர்.
    நொய்டாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மான்சி மற்றும் மன்யா ஆகியோர் 2003-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந்தேதி ஒன்பது நிமிடங்கள் இடைவெளியில் பிறந்தனர். இந்த இரட்டையர்களைப் பிரிக்கும் ஒரே விஷயம் இதுதான்.

    இருவருக்கும் ஒரே மாதிரியான முகங்களும் குரல்களும் அமைந்துள்ளன. இருவருக்கும் பூப்பந்து விருப்பமான விளையாட்டு. அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் கூட ஒரே மாதிரியானவைதான்.

    12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் இரட்டை சகோதரிகள் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்து பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.

     இரட்டை சகோதரிகள்


    அறிவியல் பாடப்பிரிவு எடுத்துள்ள இருவரும் 95.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர். இருவரும் 5 பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண் எடுத்து உள்ளனர். சகோதரிகள் ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியலில் 98 மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும், இயற்பியல், வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆகியவற்றில் தலா 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இதுகுறித்து மான்சி கூறும்போது ‘‘ஐந்து பாடங்களிலும் எங்கள் மதிப்பெண்கள் ஒரே மதிப்பெண் கிடைத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் ஒரே மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.  இது ஒரு தற்செயலான நிகழ்வு’’ என்றார்.
    Next Story
    ×