search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரிய மின் திட்டத்தை துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி
    X
    சூரிய மின் திட்டத்தை துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி

    மத்திய பிரதேசத்தில் 750 மெகாவாட் சூரிய மின்திட்டம் - நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

    மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்டு உள்ள 750 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
    புதுடெல்லி:

    மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாட்டில் வரும் 2022-ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்பின் வழியே 175 ஜிகா வாட் மின்சாரம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
     
    இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 750 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். டெல்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக திட்டத்தை துவக்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சூரிய சக்தி இப்போது மட்டுமல்லாமல் 21 ஆம் நூற்றாண்டின் ஆற்றல் தேவைகளின் மையமாக இருக்கும், ஏனெனில் சூரிய சக்தி நிச்சயமானது, தூய்மையானது மற்றும் பாதுகாப்பானது.

    ரேவாவில் உள்ள இந்த சோலார் மின் உற்பத்தி ஆலை மூலம், இங்குள்ள தொழில்களுக்கு மின்சாரம் கிடைப்பது மட்டுமல்லாமல், டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயிலுக்கு கூட அதன் பலன்கள் கிடைக்கும். ரேவாவைத் தவிர, ஷாஜப்பூர், நீமுச் மற்றும் சத்தர்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×