என் மலர்
செய்திகள்
X
காஷ்மீரில் பா.ஜனதா தலைவர் உள்பட மூன்று பேர் சுட்டுக்கொலை
Byமாலை மலர்8 July 2020 10:58 PM IST (Updated: 8 July 2020 10:58 PM IST)
காஷ்மீரில் உள்ளூர் பா.ஜனதா தலைவர், அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகிய மூன்று பேரும் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள பந்திபோரா மாவட்டத்தின் பா.ஜனதா தலைவராக இருந்தவர் ஷேக் வாசிம் பாரி. இவர் தற்போது உள்ளூர் பா.ஜனதா தலைவராக உள்ளார்.
இன்று பந்திபோராவில் உள்ள தனது கடையில் அப்பா மற்றும் சகோதரர் ஆகியோருடன் இருக்கும்போது பயங்கரவாதிகள் மூன்று பேர் மீதும் கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். இதில் ஷேக் வாசிம் பாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஷேக் வாசிம் பாரியின் பாதுகாப்பிற்காக 8 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
X