search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    கார்கில் மற்றும் ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்

    லடாக்கில் உள்ள கார்கில் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இன்று மதியம் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் வட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன.  

    இந்நிலையில், லடாக்கின் கார்கில் பகுதியில் இருந்து வடமேற்கே 119 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல், ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ரா பகுதியில் இன்று மதியம் 2.10 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.

    அரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, மேகாலயா, சத்தீஸ்கர் என கடந்த வாரம் முதல் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×