search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    காலையில் 5.30 முதல் 8.30 வரை வாக்கிங் செல்ல அனுமதி: மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காளத்தில் பொதுமக்கள் வாக்கிங் செல்ல மூன்று மணி நேரம் அனுமதி வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால் ஜூலை 1-ந்தேதி வரை அம்மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில்சேவை, ஜிம், மால்கள் போன்ற சிலவற்றிக்கு தடைகள் நீக்கப்படவில்லை. பேருந்து போக்குவரத்து போன்றவைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

    இந்நிலையில் பொதுமக்கள் காலையில் 5.30 மணி முதல் 8.30 மணி வரை வாக்கிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். திருமண விழாவில் 50 பேர் கலந்து கொள்ளவும், இறுதிச் சடங்கில் 25 பேர் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×