search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய தாமதம் ஆனால் அபராதம் கிடையாது- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

    ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஜிஎஸ்டி கவுன்சின் 40வது கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜி.எஸ்.டி. நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கக்கூடிய சட்டக்குழுவின் பல்வேறு பரிந்துரைகள் குறித்து மாநில நிதி அமைச்சர்களுன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது. வருமான வரியை முழுமையாக செலுத்தியிருந்தால் ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கலில் தாமதம் ஆனாலும் அபராதம் இருக்காது.

    ரூ.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு தாமதமாக ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான வட்டி விகிதம் 9% ஆக குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டும் வட்டி விகிதம் குறைக்கப்படும். கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோருக்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அனைத்து அமைச்சர்களின் வேண்டுகோளின் பேரில், ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜூலை மாதம் பிரத்யேகமாக ஒரு கூட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், நிலுவையில் உள்ள 2017-18 ஆம் ஆண்டிற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை ரூபாய் 4 ஆயிரத்து 73 கோடி ரூபாயையும்,  2018-2019 ஆண்டிற்கு நிலுவையில் உள்ள 553 கோடி ரூபாயையும், 2019-2020 ஆம் ஆண்டிற்கு நிலுவையிலுள்ள ஆயிரத்து 101  கோடியையும், மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினார். 
    Next Story
    ×