search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் இனிப்பு வகைகள்
    X
    நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் இனிப்பு வகைகள்

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இனிப்பு வகைகள்- கொல்கத்தா ஸ்வீட் ஸ்டாலில் அறிமுகம்

    கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இனிப்பு வகைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.
    கொல்கத்தா:

    கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆட்கொல்லி வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுடன், நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் மருந்து மாத்திரைகள், மற்றும் பிற வைரசை குணப்படுத்தும் மருந்துகளின் கூட்டு மருந்துகள் மூலம் குணப்படுத்துகின்றனர்.

    நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடவும், மூலிகை மருந்துகளை உட்கொள்ளவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர், தனது வாடிக்கையாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

    இதுபற்றி கடை உரிமையாளர் கூறும்போது ‘கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே ஒரே வழியாக கருதப்படுகிறது. மருந்து எதுவும் இதுவரை இல்லாத நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் வகையில், 15 வெவ்வேறு மசாலாப் பொருட்களை கலந்து இந்த இனிப்பு வகைகளை தயாரித்துள்ளோம். ஒவ்வொரு இனிப்பும் 25 ரூபாய் என விற்பனை செய்கிறோம்’ என்றார்.
    Next Story
    ×