search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    எம்.எல்.சி. தேர்தலில் பாஜக வேட்பாளர் திடீர் மாற்றம்

    பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 4 பேரில் ஒருவரான அஜித் கோப்சடேயை அக்கட்சி திடீரென வேட்பு மனுவை திரும்ப பெற செய்து அவருக்கு பதிலாக லாத்தூரை சேர்ந்த ரமேஷ் காரத் என்பவரை வேட்பாளராக அறிவித்தது.
    மும்பை :

    மராட்டியத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 9 எம்.எல்.சி. பதவிகளுக்கான தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இந்த பதவிகளுக்கு சிவசேனா சார்பில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தற்போதைய மேல்சபை துணை தலைவர் நீலம் கோரே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

    சிவசேனாவின் கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் 2 வேட்பாளர்களையும், காங்கிரஸ் ஒரு வேட்பாளரையும் அறிவிக்க, எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா 4 வேட்பாளர்களை களம் இறக்கியது. நேற்று வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. இந்தநிலையில், பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 4 பேரில் ஒருவரான அஜித் கோப்சடேயை அக்கட்சி திடீரென வேட்பு மனுவை திரும்ப பெற செய்தது.

    அவருக்கு பதிலாக லாத்தூரை சேர்ந்த ரமேஷ் காரத் என்பவரை பாரதீய ஜனதா வேட்பாளராக அறிவித்தது. அவர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். இதன் மூலம் பாரதீய ஜனதா சார்பில் ரமேஷ் காரத், கோபிசந்த் படல்கர், பிரவீன் தட்கே, ரஞ்சித்சிங் மோஹித் பாட்டீல் ஆகியோரும், ஆளும் கூட்டணி சார்பில் 5 பேரும் மேல்சபைக்கு போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.

    Next Story
    ×