search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்பயாவின் தாயார்
    X
    நிர்பயாவின் தாயார்

    நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிடுவது ஒத்திவைப்பு

    நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை நாளை காலை தூக்கிலிடுவதற்காக செய்யப்பட்டுவந்த ஏற்பாடுகள் டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதியின் உத்தரவையடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளையும் மார்ச் 3-ம் தேதி (நாளை) தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பவன் குமார் குப்தாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
     
    சிறார் சட்டப்பிரிவுகளின் கீழ் தனக்கு தண்டனை வழங்க வேண்டும் என கூறிவரும் குற்றவாளி பவன் குமார் குப்தாவின் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துவிட்ட நிலையில் தற்போது கடைசி சட்ட வாய்ப்பான மறு சீராய்வு மனுவும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

    நிர்பயா குற்றவாளிகள்

    இதனையடுத்து, பவன் குமார் குப்தா சார்பில் ஜனாதிபதியிடம் இன்று கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் இன்று பிற்பகல் தெரிவித்தார்.

    இந்நிலையில், தன்னை தூக்கிலிடக்கூடாது என பவன் குமார் குப்தா சார்பில் டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று பிற்பகல் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

    இதற்கிடையில், டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா இன்று மாலை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

    ஜனாதிபதியிடம் பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவின் மீது ஜனாதிபதி மாளிகை இன்னும் எந்த முடிவும் எடுக்காததால் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள்  4 பேரை தூக்கிலிடும் நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    Next Story
    ×