search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போர்க்களம் போன்று காட்சியளிக்கும் கலவர பகுதி
    X
    போர்க்களம் போன்று காட்சியளிக்கும் கலவர பகுதி

    ஒற்றுமையாக இருங்கள், வதந்திகளுக்கு இரையாக வேண்டாம்: டெல்லி மக்களுக்கு மசூதிகள் வேண்டுகோள்

    டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணும்படி அப்பகுதி மசூதிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல், துப்பாக்கி சூடு, தீ வைத்தல் போன்ற வன்முறை சம்பவங்களில் 39 பேர் பலியாகி உள்ளனர். 

    பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணும்படி அப்பகுதி மசூதிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

    ‘மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். வதந்திகளுக்கு இரையாக வேண்டாம். சந்தேகத்திற்கிடமான நபர்களைப் பற்றி அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள். காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். ஏதாவது பிரச்சினை மற்றும் அவசரநிலை என்றால், 112 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்’ என மசூதிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×