search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா
    X
    துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா

    வன்முறை எதிரொலி - வடகிழக்கு டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

    டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் எதிரொலியாக வடகிழக்குப் பகுதியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன.

    இதற்கிடையே, வடகிழக்கு டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. மாஜ்பூர் பகுதியில் நேற்று நடந்த வன்முறையில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார்.
     
    இதேபோல் பல்வேறு இடங்களில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், சிஏஏ ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இன்றும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கல்வீச்சில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. 

    ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறை 3-வது நாளாக இன்றும் தொடர்ந்தது. இருதரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. வன்முறையைத் தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் எதிரொலியாக வடகிழக்குப் பகுதியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை நடைபெறவுள்ள சிபிஎஸ்இ தேர்வுகளை ஒத்திவைக்கும்படி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×