search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றவாளி அக்சய் குமார் சிங்
    X
    குற்றவாளி அக்சய் குமார் சிங்

    நிர்பயா வழக்கு- அக்சய் குமாரின் கருணை மனுவையும் நிராகரித்தார் ஜனாதிபதி

    நிர்பயா வழக்கில் மரண தண்டனை பெற்ற அக்சய் குமாரின் கருணை மனுவையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. ஆனால், அடுத்டுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்ததால் தண்டனை தள்ளிப்போகிறது. 

    மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி குற்றவாளிகள் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், மறு உத்தரவு வரும்வரை குற்றவாளிகளை தூக்கிலிட தடை விதித்து உத்தரவிட்டது. 

    குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிடுவதற்கு டெல்லி ஐகோர்ட் அனுமதி வழங்கவில்லை. குற்றவாளிகள் தங்களுக்கு உள்ள சட்ட வாய்ப்புகளை 7 நாட்களுக்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஐகோர்ட் அவகாசம் வழங்கியது. 

    இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் சிங், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கக் கோரி சில நாட்களுக்கு முன் அனுப்பிய கருணை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். இதற்கு முன் முகேஷ் சிங், வினய் குமார் சர்மா ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×