search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தலைமை தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

    டெல்லியில் வரும் 8-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விதிகளை மீறியிருப்பதாக முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் வரும் 8-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வாக்கு சேகரித்து வருகின்றனர். 

    அவ்வகையில், ஜனவரி 13-ம் தேதி பார் அசோசியேசன் நடத்திய விழாவில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, நீதிமன்ற வளாகத்தில் மொகல்லா கிளினிக் அமைப்பது தொடர்பாக வாக்குறுதி அளித்ததாக பாஜக தலைவர் நீரஜ், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

    தேர்தல் ஆணையம்

    இதுதொடர்பாக தேர்தல் ஆணைய உத்தரவின்படி கெஜ்ரிவால் பதில் அனுப்பினார். அதில், அந்த நிகழ்ச்சியில் தனிப்பட்ட முறையில் பங்கேற்றதாகவும், டெல்லி முதல்வராக பங்கேற்கவில்லை என்றும் கெஜ்ரிவால் கூறியிருந்தார். தேர்தலுக்காக புதிதாக எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை, டெல்லி அரசு எடுத்த பழைய முடிவையே தெரிவித்ததாக கூறினார்.

    எனினும் இந்த பதிலில் தலைமை தேர்தல் ஆணையம் திருப்தி அடையவில்லை. அவரது பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டது. 

    மேலும் கெஜ்ரிவால் தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பதாக கூறி தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் கூறி உள்ளது. 
    Next Story
    ×