search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    5 ஆண்டுகளில் 233 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு

    இந்தியாவில் 2014-18 வரையிலான காலகட்டத்தில் 233 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை மந்திரி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுதல், பிரிவினைவாதத்தை தூண்டுதல், வெறுப்புணர்வை பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. 

    இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தது 3 ஆண்டுகள் முதல் வாழ்நாள் முழுவதும் சிறைதண்டனை அனுபவிக்கும் வகையில் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
     
    இந்நிலையில், 2014-ம் ஆண்டு முதல் 2018 வரை ( 5 ஆண்டுகள்) நாட்டில் எத்தனை பேர் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது. 

    இந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை இணைய மந்திரி கிஷன் ரெட்டி,'' தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தகவலின் படி, 2014-ம் ஆண்டு முதல் 2018 வரை நாடு முழுவதும் 233 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

    2014-ம் ஆண்டு 47 பேர், 2015-ம் ஆண்டு 30 பேர், 2016-ம் ஆண்டு 35 பேர், 2017-ம் ஆண்டு 51 பேர், 2018-ம் ஆண்டு 70 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×