search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசத்துரோக வழக்கு"

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகளை ஆதரித்து பேசிய கண்ணையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக இன்று கோர்ட்டில் 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. #JNUSUpresident #KanhaiyaKumar
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை துக்கத்தினமாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சில மாணவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு கடைப்பிடித்தனர்.

    அப்போது அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டதாக, பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட உண்மையான வீடியோ ஆதாரங்களை சி.பி.ஐ. தடயவியல் ஆய்வுக்கூடத்திற்கு டெல்லி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கப்பெற்றதால் அவர்கள் சிறையில் இருந்து வெளியேறினர்.

    கண்ணையா குமார் கைதை கண்டித்து டெல்லி மற்றும் வேறுசில பகுதிகளில் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாகவும் வெடித்தது.


    இந்நிலையில், கண்ணையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்திய குற்றவியல் சட்டம் 124A 323, 465, 471,143, 149, 147, 120B ஆகிய பிரிவுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில் கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா, அகிப் ஹுசேன், முனீப் ஹுசேன், உமர் குல், ரயீயா ரசூல், பஷீர் பட், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜாவின் மகள் அபரஜிதா ராஜா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

    இந்த குற்றப்பத்திரிகை தொடர்பாக கோர்ட் நாளை பரிசீலிக்கும் என எதிர்பார்க்கும் நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்ணையா குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    மூன்றாண்டுகளுக்கு பின்னர் தற்போது எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்காக போலீசாருக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இருந்தே இதில் அரசியல் நோக்கம் இருப்பது தெளிவாக புரிகிறது. என் நாட்டின் நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என கண்ணையா குமார் குறிப்பிட்டுள்ளார். #JNUSUpresident #KanhaiyaKumar 
    தேசத்துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு துபாயில் தலைமறைவாக இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பை கைது செய்ய சர்வதேச போலீஸ் மறுத்துள்ளது. #Interpolrejected #Musharrafarrest
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது அந்நாட்டு அரசு தேசத்துரோகம் உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதனால் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், சிந்து மாகாண ஐகோர்ட்டு, முஷரப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையை கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் நீக்கியது.

    இதையடுத்து, வெளிநாட்டுக்கு சென்ற அவர் தற்போது துபாயில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார். முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, பாகிஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டில் தேவை இல்லாமல் நெருக்கடிநிலை சட்டத்தை அமல்படுத்திய தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் முஷரப் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது ஆஜராக தவறியததால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முஷரப்புக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கி வைக்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

    ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் மூலம் முஷரப்பை கைது செய்து ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் பாகிஸ்தானுக்கு அழைத்து வருமாறு பாகிஸ்தன் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை நிறைவேற்ற வசதியாக பர்வேஸ் முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய அடையாள அட்டையை முடக்கி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால், 20-ம் தேதி அவர் ஆஜர்படுத்தப்படாததால் பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சக செயலாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்கு அழைத்தது.

    இதைதொடர்ந்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான உள்துறை செயலாளர், முஷரப்பை கைது செய்ய முடியாது என இன்டர்போல் போலீசார் மறுப்பு தெரிவித்து விட்டதாக குறிப்பிட்டார். 

    உள்நாட்டு அரசியல் தொடர்புடைய தேசத்துரோகம் போன்ற வழக்குகளில் தேடப்படும் நபரை கைது செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என இன்டர்போல்  சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் நீதிபதியிடம் அவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தானுக்கு வந்தால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதாலும், துபாயில் இருந்து விமானத்தில் வருவதற்கு அவரது உடல்நிலை சரியில்லாததாலும் இவ்வழக்கு விசாரணையில் முஷரப் பங்கேற்க முடியவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இந்த வழக்கில் “ஸ்கைப்” மூலம் முஷரப்பிடம் இருந்து வாக்குமூலம் பெற முயற்சிக்காதது ஏன்? என அரசுதரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி யாவர் அலி கேள்வி எழுப்பினார். 

    துபாயில் இருக்கும் முஷரப்பிடம் இருந்து  “ஸ்கைப்” மூலம் வாக்குமூலத்தை பதிவு செய்து கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கின் மறுவிசாரணையை செப்டம்பர் மாதம் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #Interpolrejected #Musharrafarrest
    பாகிஸ்தானில் தேவை இல்லாமல் நெருக்கடிநிலை சட்டத்தை அமல்படுத்திய முன்னாள் அதிபர் முஷரப்புக்கு எதிரான தேசத்துரோக வழக்கில் வரும் 20-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்குகிறது. #Pakistancourt #Musharraftreasontrial
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது அந்நாட்டு அரசு தேசத்துரோகம் உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதனால் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சிந்து மாகாண ஐகோர்ட்டு, முஷரப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையை கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் நீக்கியது.

    இதையடுத்து, வெளிநாட்டுக்கு சென்ற அவர் தற்போது துபாயில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார். முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் முஷரப் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது ஆஜராக தவறியததால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முஷரப்புக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கி வைக்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

    ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் மூலம் முஷரப்பை கைது செய்து பாகிஸ்தானுக்கு அழைத்து வருமாறு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை நிறைவேற்ற வசதியாக பர்வேஸ் முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய அடையாள அட்டையை முடக்கி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டில் தேவை இல்லாமல் நெருக்கடிநிலை சட்டத்தை அமல்படுத்தியதாக  முன்னாள் அதிபர் முஷரப்புக்கு எதிராக நவாஸ் ஷரிப் தலைமையிலான அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் முன்னர் தொடர்ந்த தேசத்துரோக வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Pakistancourt #Musharraftreasontrial
    வைகோவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கில் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Vaiko #VaikoSeditionCase
    சென்னை:

    கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதவாக பேசியதாக வைகோ மீது  தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்திய வைகோ, தாமாக முன்வந்து சிறைக்கு சென்றார். 50 நாட்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த பின்னர், ஜாமீனில் வெளியே வந்து வழக்கு விசாரணையை சந்தித்து வருகிறார்.

    இந்நிலையில், தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு எதிராக இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 18-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். செப்டம்பர் 18-ம் தேதி முதல், வைகோ மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும். #Vaiko #VaikoSeditionCase
    காஷ்மீரில் ராணுவ வீரர்கள் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாக கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீது டெல்லி கோர்ட்டில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான குலாம் நபி ஆசாத், கடந்த 22-ந் தேதி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

    இந்த பேட்டியின் போது அவர் ‘காஷ்மீர் மாநிலத்தில் ராணுவவீரர்கள் நடத்துகிற தாக்குதல்களில் பயங்கரவாதிகளை விட அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகிறார்கள்’ என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த சாஷி பூஷன் என்கிற வக்கீல் குலாம் நபி ஆசாத் மீது டெல்லி கோர்ட்டில் தேசத்துரோக வழக்கை தாக்கல் செய்தார்.

    அவர் தன்னுடைய மனுவில், “தேசத்துரோகம், குற்ற சதி செய்தல், கலகத்தை ஏற்படுத்தும் நோக்கில் ராணுவம் குறித்த தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் குலாம் நபி ஆசாத் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனு இன்று (சனிக்கிழமை) நீதிபதி முன்பு விசாரணைக்கு வருகிறது.
    பல்வேறு வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. #PervezMusharraf
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது தேசத்துரோகம் உள்பட பல வழக்குகள் நடந்து வருகிறது. தற்போது அவர் துபாயில் தஞ்சமடைந்துள்ளார். பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் முஷரப் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது ஆஜராக தவறியதால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முஷாரப்புக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் மூலம் முஷரப்பை கைது செய்து பாகிஸ்தானுக்கு அழைத்து வருமாறு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை நிறைவேற்ற வசதியாக பர்வேஸ் முஷாரப்பின் பாஸ்போர்ட் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய அடையாள அட்டையை முடக்கி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. 

    பின்னர், அந்நாட்டு தேசிய தகவல் பதிவு மையத்தின் தலைமை அதிகாரி கேட்டுக்கொண்டதன் பேரில், முஷாரப்பின் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை முடக்கத்தை சுப்ரீம் கோர்ட் நேற்று ரத்து செய்தது. முஷாரப் நாடு திரும்ப வேண்டும், வழக்கை சந்திக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.

    இதற்கிடையில், அடுத்த மாதம் 25-ம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் சித்ரால் தொகுதியில் போட்டியிட முஷரப் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்யவும், வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்ளவும் வழிசெய்யும் விதத்தில் அவரது பாஸ்போர்ட் முடக்கம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

    இதற்கு முன்னதாக லாகூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் விசாரணையில் நேற்று முன்தினம் முஷாரப் ஆஜராக இறுதி கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால்,அவர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை.

    இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு பெஷாவர் நீதிமன்றம் தன்னை அதிபர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்த நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் முஷரப் தாக்கல் செய்திருந்த மனுவின் மீது அன்றைய தினம் விசாரணை நடந்தது.

    அதில், நேற்று முஷாரப் ஆஜராக வேண்டும். அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. எனினும், அவர் ஆஜராகாத நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முஷாரப்புக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    ×