என் மலர்

  செய்திகள்

  துப்பாக்கிச்சூடு
  X
  துப்பாக்கிச்சூடு

  உ.பி.யில் துணிகரம் - விஷ்வ இந்து மகாசபா தலைவர் சுட்டுக்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தர பிரதேசத்தின் லக்னோவில் விஷ்வ இந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  லக்னோ:

  உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் வசித்து வந்தவர் ரஞ்சித் பச்சன் (40). விஷ்வ இந்து மகாசபா தலைவரான ரஞ்சித் பச்சன் இன்று காலை அவரது உறவினர் ஆதித்யா ஸ்ரீவத்சாவுடன் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் வாக்கிங் மேற்கொண்டார்.

  அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் ரஞ்சித் பச்சன் மற்றும் அவரது நண்பர் மீதும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ரஞ்சித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  மேலும் காயமடைந்த ஸ்ரீவத்சவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட ரஞ்சித் பச்சனுக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

  காலையில் வாக்கிங் சென்றபோது விஸ்வ இந்து மகாசபை தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×