search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.வி.காமத், ஸ்வபன் தாஸ்குப்தா
    X
    கே.வி.காமத், ஸ்வபன் தாஸ்குப்தா

    மோடி மந்திரி சபையில் மாற்றம்? -பிரிக்ஸ் வங்கி தலைவர் கே.வி.காமத் இடம்பெற வாய்ப்பு

    பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், இதில் கே.வி.காமத் நிதித்துறை இணை மந்திரியாக இடம்பெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    புதுடெல்லி: 

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்னர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    மந்திரி சபையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறப்படுவதையொட்டி, தொழில்நுட்ப பின்னணி கொண்டவர்களை இடம்பெற வைக்க மோடி விரும்புவதாக கூறப்படுகிறது.

    அதன்படி, பிரிக்ஸ் வங்கி தலைவரும், ஐசிஐசிஐ வங்கி மற்றும் இன்போசிஸின் முன்னாள் தலைவருமான கே.வி.காமத் (72) மற்றும் பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தா (64) ஆகியோரை தனது மந்திரி சபையில்  பிரதமர் மோடி சேர்க்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    பாராளுமன்றம்

    கே.வி.காமத்தை நிதித்துறை இணை மந்திரியாகவும், ஸ்பவன் தாஸ்குப்தாவை மனிதவள மேம்பாட்டு துறை இணை மந்திரியாகவும் நியமிக்கலாம் என தெரிகிறது. இவர்கள் மட்டுமின்றி நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்தும் மந்திரி சபையில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாகவும், முன்னாள் மத்திய ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    மோடி மந்திரிசபையில் வடமாநிலங்களுக்கு முக்கியத்துவம் அதிகமாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், மங்களூருவை சேர்ந்த கே.வி.காமத் நியமனம் மூலம் தென்மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வாய்ப்புள்ளது. 

    2020-2021ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×