search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்ரபதி சிவாஜி சிலை அருகே பிரதமர் மோடி
    X
    சத்ரபதி சிவாஜி சிலை அருகே பிரதமர் மோடி

    சத்ரபதி சிவாஜியுடன் பிரதமர் மோடியை ஒப்பிடும் புத்தகத்தை தடைசெய்ய வேண்டும் - சஞ்சய் ராவத்

    மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியுடன் பிரதமர் மோடியை ஒப்பிடும் வகையில் எழுதப்பட்டுள்ள புத்தகம் அவமானம் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
    மும்பை:

    மராட்டிய வரலாற்றில் மிக முக்கியமானவர் மன்னர் சத்ரபதி சிவாஜி.  மிகப் பெரிய முதல் கடற்படை தளத்தை உருவாக்குவதற்கான அவரின் தொலைநோக்கு பார்வையால், அவர் "இந்திய கடற்படையின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

    அவரின் ஹிந்தவி சுயராஜ்ஜிய சித்தாந்தமும், அதன் தொடர்ச்சியாக மராட்டிய பேரரசின் தொடர்ச்சியான விரிவாக்கமும் தற்போதைய மகராஷ்டிர வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மராட்டிய மக்கள் பார்வையில் அவர் மிகப்பெரிய தலைவராக இன்றும் மதிக்கப்படுகிறார்.

    இதற்கிடையே பாஜக கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவர் ‘ஆஜ் கே சிவாஜி (இன்றைய சிவாஜி) : நரேந்திர மோடி’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 

    இந்நிலையில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிடும் வகையில் எழுதப்பட்டுள்ள புத்தகம் அவமானம் எனவும் அதை தடை செய்யவேண்டும் எனவும் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    சஞ்சய் ராவத்

    ‘பிரதமர் நரேந்திர மோடியை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அவரை சிவாஜி மகாராஜாவுடன் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதை நாங்கள் அவமானமாக கருதுகிறோம். மேலும் இந்த புத்தகம் பிரதமர் மோடியை சமாதானப்படுத்த சில அடிமைகள் எழுதியது போன்று தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடியை சிவாஜி மகாராஜைப் போலவே சிறந்தவர் என அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதா என்று பாரதிய ஜனதா கட்சி தெளிவுபடுத்த வேண்டும்’ என சஞ்சய் ராவத் கூறியுள்ளார். 
    Next Story
    ×