search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆய்ஷி கோஷ்
    X
    ஆய்ஷி கோஷ்

    எனக்கு எதிராக எந்தவொரு ஆதாரங்கள் இருந்தாலும் பகிரங்கமாக வெளியிட வேண்டும்: ஆய்ஷி கோஷ்

    நான் எப்படி தாக்கப்பட்டேன் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று, டெல்லி போலீசார் படத்தை வெளியிட்டுள்ள நிலையில் ஆய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார்.
    டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். மாணவர் சங்க தலைவர் ஆய்ஷி ஜோஷ் மண்டையும் உடைக்கப்பட்டது. என்றாலும், வன்முறையில் ஈடுபட்டதாக  இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதை ஆய்ஷி கோஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    இந்நிலையில் இன்று ஜே.என்.யூ.வில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9 பேரின் புகைப்படங்களை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. இதில் ஆய்ஷி கோஷ் படமும் இடம் பெற்றுள்ளது.

    இந்நிலையில் எனக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என டெல்லி போலீசாருக்கு ஆய்ஷி கோஷ் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து ஆய்ஷி கோஷ் கூறுகையில் ‘‘எனக்கு எதிராக எந்தவொரு ஆதாரங்கள் இருந்தாலும், அதை பொதுஇடத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். நான் எப்படி தாக்கப்பட்டேன் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது’’ என்றார்.
    Next Story
    ×