
சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி திருவனந்தபுரம் சென்றார். அங்கு கேரள போலீஸ் டி.ஜி.பி.லோக்நாத் பெக்ராவை சந்தித்து பேசினார்.
இருவரும் திருவனந்தபுரத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
2 பயங்கரவாதிகளின் படங்கள் கேரளாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கேரள டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் களியக்காவிளைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தப்பி ஓடிய 2 பயங்கரவாதிகள் கேரளாவிலும் அசம்பாவிதத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக அம்மாநில போலீசார் 2 பேரையும் பிடிக்க அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர்.