search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    மும்பை, வாரணாசி, ஜம்முவில் ஏழுமலையான் கோவில்- திருப்பதி தேவஸ்தானம்

    மும்பை, வாரணாசி, ஜம்முவில் ஏழுமலையான் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருமலை அன்னமய்யபவனில் அறங்காவலர் குழுக்கூட்டம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ஜனவரி 6, 7-ந்தேதிகளில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி உற்சவ நாட்களில் பக்தர்களுக்கு வைகுண்ட வாயில் தரிசனம் வழங்கப்படும். முக்கிய பிரமுகர்களுக்கு எவ்வித தொந்தரவுகளும் இல்லாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு அதிக அளவில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஜம்மு-காஷ்மீர் மற்றும் வாரணாசியில் ஏழுமலையான் கோவில் கட்ட குழுவில் ஒருமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி கேட்டு, அந்த மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மும்பையில் உள்ள பாந்தராவில் ரூ.30 கோடி செலவில் ஏழுமலையான் கோவில் மற்றும் தகவல் மையம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது.

    2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது தேவஸ்தானம் ரூ.3,116 கோடியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் எதிர்பார்ப்பு, ரிவைஸ்ட் பட்ஜெட்டாக ரூ.3,243 கோடியை தயார் செய்திருந்தது. அதில் ஏழுமலையான் கோவில் உண்டியல் வருவாய் ரூ.1,231 கோடியாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.ஆனால் ரூ.1,285 கோடி கிடைத்துள்ளது.

    அதேபோல் பிரசாதங்கள் விற்பனை மூலம் ரூ.270 கோடி கிடைக்கும் என எதிர்பார்த்த இடத்தில் ரூ.330 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    ரூ.14கோடி செலவில் திருமலையில் உள்ள வராக சாமி கோவில் கோபுரத்துக்கு தங்க மூலாம் பூசப்படுகிறது.

    திருப்பதி மலைப் பாதையில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள சென்னையில் உள்ள ஜி.என்.டி.யூ நிறுவன நிபுணர்களுடன் கமிட்டி ஏற்பாடு செய்யப்படுகிறது.

    திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் ரூ.14.50 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    Next Story
    ×