search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்
    X
    கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்

    பொருளாதாரத்துக்காகவே வங்கதேசம், பாக்.கில் இருந்து முஸ்லிம்கள் இந்தியா வருகின்றனர் - கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்

    பொருளாதார வாய்ப்புகளை தேடியே வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து முஸ்லிம் மக்கள் இந்தியாவிற்கு வருவதாக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. 

    இதற்கிடையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போரட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்கள் சில பகுதிகளில் வன்முறையில் முடிந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான், ''பாகிஸ்தானில் மதரீதியில் துன்பங்களுக்கு உள்ளான மக்களை பாதுகாக்க மகாத்மா காந்தி, பண்டித ஜவர்கலால் நேரு மற்றும் காங்கிரஸ் கட்சியால் அளிக்கப்பட்ட வாக்குறுதியையே மத்திய அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது. 

    இந்த குடியுரிமை சட்டத்திற்கான செயல்திட்டம் 1985 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது. தற்போதுள்ள அரசு அந்த செயல் திட்டத்திற்கு சட்ட வடிவம் கொடுத்துள்ளது. 

    பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடாக உருவானது. ஆகையால், அங்கு எப்படி முஸ்லிம் மக்கள் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவார்கள்? பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் இந்தியாவுக்கு வருகின்றனர் என்பதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். 

    ஆனால், அவர்கள் மத ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி இங்கு வரவில்லை. அவர்கள் பொருளாதார வாய்ப்புகளை தேடி மட்டுமே இந்தியாவுக்கு வருகின்றனர்’’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×