search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் நடந்த ஆர்ப்பாட்டம்
    X
    கர்நாடகாவில் நடந்த ஆர்ப்பாட்டம்

    தடையை மீறி ஆர்ப்பாட்டம்- போராட்டக்காரர்களை தடுப்பு காவலில் வைத்தது கர்நாடக போலீஸ்

    கர்நாடகாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த முயன்றவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
    பெங்களூரு:

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி நடத்தினர். மாணவர்கள் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    கர்நாடகாவில் இன்று இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதனால் கர்நாடகா முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த தடை உத்தரவானது டிசம்பர் 21-ந் தேதி வரை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் தடையை மீறி போராட்டக்காரர்கள் ஆங்காங்கே ஒன்று திரண்டு போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி போராட முயன்றதாக, பெங்களூரு, கலபுரகி, சிவமோகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். 

    இப்போராட்டம் தொடர்பாக பெங்களூரு கூடுதல் கமிஷனர் உமேஷ் குமார் கூறுகையில், ‘144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், நகரில் எந்த இடத்திலும் போராட்டம் நடைபெறவில்லை. சட்டம் ஒழுங்கை பராமரிக்க 50 கம்பெனி ரிசர்வ் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் அமைதியான சூழல் நிலவுகிறது’ என்றார்.
    Next Story
    ×