search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தரிப்பு படம்
    X
    சித்தரிப்பு படம்

    ஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்

    ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 20 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகள் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள தொகுதிகள் என்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று வாக்களித்தவர்கள்

    இந்நிலையில், கிழக்கு சிங்பம் மாவட்டத்துக்குட்பட்ட 234-வது வாக்குச்சாவடியில் இன்று பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் சந்திரா கிரி என்பவர் மாரடைப்பால் மயங்கி விழுந்தார். உடனிருந்த காவலர்கள் அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

    ஹரிஷ் சந்திரா கிரியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். கடமையின்போது உயிரிழந்த  உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் சந்திரா கிரி(44) உத்தர பிரதேசம் மாநிலத்தின் அசம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
    Next Story
    ×