search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பாபர் மசூதி இடிப்பு தினம் - அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிப்பு

    பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 27-வது ஆண்டு தினம் நாளை அனுசரிக்கப்படுவதால் அயோத்தி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    லக்னோ:

    இந்தியாவில் நெடுங்காலமாக சர்ச்சையில் இருந்த அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் 9-11-2019 அன்று தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் பிரச்சனைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம், அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.

    இதற்கிடையே, கடந்த 1992-ம் ஆண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினத்தின் 27-வது ஆண்டு நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

    குறிப்பாக, அயோத்தி நகர் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.  
    Next Story
    ×