search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு- ராணுவ வீரர் காயம்

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் உள்ள டெர்ரம் என்ற வனப்பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் உள்ள டெர்ரம் என்ற வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

    இன்று அதிகாலை அங்கு மாவோயிஸ்டுகளை வேட்டையாட மத்திய துணை நிலை ராணுவ வீரர்கள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    வனப்பகுதியில் புகுந்து தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டு இருந்தனர். மாவோயிஸ்டுகள் சிலர் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.

    ஆனால் குறிப்பிட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் யாரும் இல்லை. என்றாலும் சில இடங்களில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது.

    ஒரு இடத்தில் தோண்டிய போது சக்தி வாய்ந்த கண்ணி வெடிகுண்டு வெடித்தது.

    இதில் முன்னாகுமார் என்ற ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அந்த பகுதியில் மேலும் கண்ணி வெடிகள் இருக்கலாம் என்பதால் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டது. கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு கண்ணி வெடிகளை தேடும் பணிகள் நடந்தது.
    Next Story
    ×