search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஞ்சன் கோகாய்
    X
    திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஞ்சன் கோகாய்

    முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தனது பணிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து, ரஞ்சன் கோகாய் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
    திருப்பதி:

    இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த நீதிமன்றமாக கருதப்படும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பவர் ரஞ்சன் கோகாய். இவர் தனது பதவி காலத்தில் அயோத்தியா, ரபேல், சபரிமலை விவகாரம் உள்ளிட்ட மிகவும் முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.  

    இதற்கிடையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நாளையுடன் (நவம்பர் 17) அதிகாரப்பூர்வமாக நிறைவடைகிறது. ஆனால், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் நேற்றுடன் அவரது பணிக்காலம் நிறைவடைந்தது. 

    ரஞ்சன் கோகாய் மற்றும் அவரது மனைவி ரூபாஞ்சலி

    இந்நிலையில், தனது பணிக்காலம் நிறைவடைந்ததையடுத்து ரஞ்சன் கோகாய் தனது மனைவி ரூபாஞ்சலியுடன் இன்று திருப்பதி சென்றார். அங்கு வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 
    Next Story
    ×