search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்சிஜனை சுவாசிக்கும் வாடிக்கையாளர்கள்
    X
    ஆக்சிஜனை சுவாசிக்கும் வாடிக்கையாளர்கள்

    சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்

    டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் வசூலிக்கும் ஆக்சிஜன் பார் தொடங்கப்பட்டுள்ளது
    புதுடெல்லி: 

    தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையில் இருந்தே காற்று மாசுபாடு மிகவும் அபாய அளவைத் தாண்டியது. மனிதர்கள் சுவாசிக்க  தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்து உள்ளதால் கடந்த 1-ம் தேதி மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது.  

    இதனால் கனரக வாகனங்கள் மற்றும் அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. பள்ளிகளுக்கு  இரண்டு நாட்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. காற்றின் தரம் சிறிது சீரடைந்து வந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படன.  இதையடுத்து மீண்டும் காற்றின் தரம் குறைந்து விட்டதால், மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால்  டெல்லியில் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கட்டண முறையில் சுத்தமான காற்றை விற்பனை செய்யும் ஆக்சிஜன் பார் டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து அதன் நிறுவனர் கூறுகையில், ‘கடந்த மே மாதம் இந்த ஆக்சிஜன் பார் தொடங்கப்பட்டது. இங்கு எடை குறைப்பு,  நினைவாற்றலை தக்க வைத்தல், மனதிற்கு ஆற்றல், ஊக்கம் அளிப்பது போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. மேலும்  மனச்சோர்வை நீக்கவும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. 

    சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் வசூலிக்கும் முறையும் உள்ளது. அதாவது 10 முதல் 15 நிமிடங்களுக்கு சுத்தமான காற்றை  சுவாசிக்க ரூ.299 வசூலிக்கப்படுகிறது. சாதாரணமாக உள்ளிழுக்கும் ஆக்சிஜன் அளவை விட நான்கைந்து மடங்கு ஆக்சிஜன் உள்ளிழுக்க  அனுமதிக்கப்படும்.  

    விலைப்பட்டியல்

    சுவாசிக்கும் காற்றின் மணத்தை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கலாம். வெனிலா, செர்ரி, பாதாம், ஸ்பியர்மிண்ட், மிளகுக்கீரை,  யூகலிப்டஸ், எலுமிச்சை, ஆரஞ்சு, தோட்ட நறுமணம், இலவங்கப்பட்டை மற்றும் லாவண்டர் போன்ற நறுமணங்களிலிருந்து தேர்வு  செய்யலாம். ஒவ்வொரு நறுமணத்திற்கும் விலைகள் மாறுபடும். வாடிக்கையாளர்கள் நறுமண சுவையை தேவைக்கேற்ப மாற்றலாம். 

    சுத்தமான வாயு ஆக்சிஜன் செறிவூட்டிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது, அவை சுற்றுப்புறக் காற்றை எடுத்து நைட்ரஜன் மற்றும் பிற  வளிமண்டல வாயுக்களை ஒரு மூலக்கூறு வடிகட்டியுடன் பிரித்து 95% தூய்மையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன,’ என  தெரிவித்தார்.
    Next Story
    ×