search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    துனிசியா அதிபராக பதவியேற்ற கைஸ் சையதுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    துனிசியா நாட்டின் அதிபராக பதவியேற்ற கைஸ் சையதுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    துனிசியா அதிபர் பேஜி சைட் எஸ்ஸெப்ஸி கடந்த ஜூலை மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. 

    இந்த தேர்தலில் 72.71 சதவீதம் வாக்குகளைப் பெற்ற கைஸ் சையத் அந்நாட்டின் அதிபராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

    கைஸ் சையத்

    இந்நிலையில், துனிசியா நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்ட கைஸ் சையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு எனது வாழ்த்துக்கள். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×