search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பித்யா தேவி பண்டாரி - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    பித்யா தேவி பண்டாரி - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன் சந்திப்பு

    ஜப்பான் மன்னர் முடிசூட்டு விழாவுக்காக டோக்கியோ வந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நேபாளம் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டின் 126-வது மன்னராக நருஹிட்டோ சம்பிரதாயப்படி முடிசூட்டிக் கொண்டார்.

    டோக்கியோ நகரில் உள்ள இம்ப்ரியல் அரண்மனையில் இன்று நடைபெற்ற முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஜப்பான் வந்தடைந்தார்.

    அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை

    29 ஆண்டுகளுக்கு பின்னர் ஜப்பானுக்கு வந்த இந்திய ஜனாதிபதி என்ற முறையில் அவருக்கு மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மூன்று நாட்கள் ஜப்பானில் தங்கி இருக்கும் ராம்நாத் கோவிந்த் இன்று நேபாளம் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு தரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
    Next Story
    ×