search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளம் காரணமாக படகில் செல்லும் கிராம மக்கள்
    X
    வெள்ளம் காரணமாக படகில் செல்லும் கிராம மக்கள்

    உத்தர பிரதேசத்தில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் 150 கிராமங்கள்

    உத்தர பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 150-க்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
    அலகாபாத்:

    வட இந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கங்கா மற்றும் யமுனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அலகாபாத் (பிரயாங்ராஜ்) நகரில் உள்ள 150-க்கும் அதிகமாக கிராமங்கள் வெள்ளத்தில் ழூழ்கின. நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் சூழ்ந்துள்ள குடியுருப்பு பகுதிகள்

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 15 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆயிரக்கனக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×