search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீயில் எரிந்து கிடக்கும் கார்
    X
    தீயில் எரிந்து கிடக்கும் கார்

    காஷ்மீரில் ஏன் வாகனம் ஓட்டுகிறீர்கள்? காரை தீயிட்டு கொளுத்திய பயங்கரவாதிகள்

    காஷ்மீரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கும் போது ஏன் வாகனம் ஓட்டுகிறீர்கள் எனக்கூறி சாலையில் சென்றுகொண்டிருந்த காரை நிறுத்திய பயங்கரவாதிகள் அதை தீயிட்டு கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காஷ்மீர்:

    ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

    இதனால், காஷ்மீரில் இயல்ப்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. வணிகர்கள் தங்கள் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பிரிவினைவாதிகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளதால் ஒரு சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடைகளை திறந்து வியாபாரம் நடத்தும் கடை உரிமையாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

    எரிந்த நிலையில் கார்

    இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா பகுதியில் உள்ள சாலையில் பஷிர் அகமது கான் என்பவர் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் 4 பேர் அகமது கான் சென்ற காரை வழிமறித்தனர். இதனால் பதற்றமடைந்த அவர் காரை நிறுத்தினார். 

    அகமது கானை காரை விட்டு கீழே இறங்க சொன்ன பயங்கரவாதிகள், முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஏன் சாலையில் காரை ஓட்டி வந்தாய்? என கூறி அவரை கடுமையாக தாக்கினர். மேலும், அவர் ஓட்டிவந்த காரை தீயிட்டு கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் காரில் பற்றிய தீயை அணைத்ததுடன், தப்பிச்சென்ற பயங்கரவாதிகள் குறித்து விசாராணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.  
    Next Story
    ×